2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இறால் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 10 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். சாவகச்சேரி கடல்நீரேரி பகுதியில் இறால் பிடிப்பதற்கு  சென்ற வயோதிப மீனவர் ஒருவர் இன்று  புதன்கிழமை (10) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவக்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி பெரியபுலத்தைச் சேர்ந்த கந்தையா தர்மலிங்கம் (வயது 73) என்பவரது சடலம் கடல்நீரேரியில் மிதந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளது.

இரவு  வேளையாகியும்  இவர் வீடு திரும்பாததை அடுத்து, உறவினர்கள் கடல்நீரேரியில்  தேடியுள்ளனர்.  அத்துடன், இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.  

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .