Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
சபையின் ஒழுங்கு விதிகளை மீறும் உறுப்பினர்களை சபையில் இருந்து வெளியேற்றும் அதிகாரம் தனக்கு உள்ளதாக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார்.
வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோது, முன்பள்ளி நியதிச் சட்டம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விவாதத்தில் உறுப்பினர் கந்தை சர்வேஸ்வரன் உரையாற்றுக்கொண்டிருக்கும் போது, இடையில் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா எழும்பி கருத்துக்கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த சர்வவேஸ்வரன் தான் உரையாற்றிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவரைக் கருத்துக்கூறுமாறும், தான் உரையாற்றும் போது குழப்ப வேண்டாம் எனவும் கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர், ஒரு உறுப்பினர் உரையாற்றும்போது மற்றைய உறுப்பினர் இடையில் குழப்புவது சபையின் ஒழுங்கு விதியை மீறுவதாகும். சபைக்கு என்று ஒழுங்கு விதிகள் உள்ளன. அதனை அனைத்து உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும். அதனைக் கடைப்பிடிக்காதவர்களை சபையில் இருந்து வெளியேற்றும் அதிகாரம் தனக்கு உள்ளதாக கூறினார்.
13 minute ago
15 minute ago
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
22 minute ago
28 minute ago