Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 12 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் வாகனங்களை தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை செய்யும் நடவடிக்கை யாழ்.பொதுநூலகத்துக்கு அருகில் வெள்ளிக்கிழமை (12) செய்யப்பட்டது.
மோட்டார் போக்குவரத்து திணைக்கள யாழ்.மாவட்ட பரீட்சகருடன் பொலிஸார் இணைந்து மாணவர்களை ஏற்றி இறக்கும் முச்சக்கரவண்டிகள், வான்கள், பஸ்கள், என்பற்றை தரக்கட்டுப்பாடு செய்தனர்.
முச்சக்கரவண்டியிலுள்ள தேவையில்லா கண்ணாடிகள், தேவையற்ற அலங்கரிப்புக்கள், அநாவசியமான படங்கள் ஒட்டப்பட்டுள்ளமை, வான்கள், பஸ்களின் இருக்கைள், கதவுகளின் உறுதித்தன்மை, கண்ணாடிகள் உடைந்த நிலையில் இருக்கின்றனவா? கம்பிகள் உக்கியுள்ளதா? உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது பரிசோதிக்கப்பட்டது.
அத்துடன், வாகனங்களில் விளக்குகள், சமிக்ஞை விளக்குகள் உள்ளிட்டவையும் சோதிக்கப்பட்டன. குறைகள் இனங்காணப்பட்டவர்களுக்கு அதனைச் சீர் செய்வதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த கால அவகாசத்துக்குள் அதனைச் சீர்செய்ய தவறின் மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் அந்த வாகனங்கள் ஈடுபடமுடியாது என பரீட்சகர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago