2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வாகன விபத்துக்களால் கடந்த வாரம் 84பேர் மரணம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 12 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற 70 விபத்துக்களில் 84 பேர் மரணமடைந்துள்ளதாக யாழ்;ப்பாணப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உபபரிசோதகர் ஐ.சி.ஏ.கே.ஜெயவன்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'பாடசாலை பிள்ளைகள் தொடர்பில் அதிக அக்கறை எடுக்கவேண்டும். அவர்கள் விபத்துக்களில் சிக்குவதை தவிர்க்கும் முகமாக அவர்களை ஏற்றியிறக்குபவர்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிப்போம்' என்றார்.

'விபத்துக்களை குறைக்கும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வார்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .