2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Thipaan   / 2015 ஜூன் 14 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மக்கள் வங்கியின் 54ஆவது நிறைவையொட்டி மக்கள் வங்கியின் ஊழியர்களின் இரத்ததான நிகழ்வு ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.
வங்கி வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் என மொத்தம் 125பேர் இரத்ததானம் செய்தனர்.

இரத்ததானத்தில் வழங்கப்பட்ட இரத்தத்தை யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பணிப்பாளர் திருமதி ஆர்.இராமவித்தியா தலைமையிலான குழுவினர் சேகரித்தனர்.

மக்கள் வங்கியின் யாழ் பிராந்திய முகாமையாளர், ரி.சுசீந்திரன் முன்னாள் பிராந்திய முகாமையாளர் கே.பத்மநாதன், யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக் கிளைகளின் முகாமையாளர்கள் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இரத்தானம் செய்தவர்களுக்கு மக்கள் வங்கியின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பயன்தரு பழமரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .