Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 14 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எல்.லாபீர்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் சிவில் சமூகத்தின் மீள்குடியேற்ற மீளாய்வு ஒன்றுகூடல், யாழ்.பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (13) நடைபெற்றது.
யாழ்ப்பாணம், வேலணை மற்றும் பூநகரி பிரதேசங்களில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட மீள்குடியேற்ற உதவிகள் தொடர்பில் இக்கூட்டத்தில் அறிக்கைகளாக சமர்ப்பிக்கப்பட்டன.
ஒன்றுகூடலில் உரையாற்றிய யாழ். முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எச்.ஜமால், 'கடந்த 5 வருடங்களாக யாழில் மீள்குடியேறி வாழும் மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை சம்மேளனம் மேற்கொண்டுள்ளது. இந்திய வீட்டுத்திட்ட நடவடிக்கைகளுக்காக அதிகமான நேர காலத்தை செலவழித்துள்ளோம் எனக்கூறினார்.
வடமாகாண சபை உறுப்பினர் ஆயுப் அஸ்மின், 'இந்தக் கூட்டத்தில் அரச அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைகள் உண்மையை வெளிப்படுத்துகின்றன. மக்கள் கட்டுக்கதைகளை நம்பி வீண் பிரச்சினைகள் ஏற்படுத்த வேண்டாம்' என்றார்.
இந்த ஒன்றுகூடலின் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை இங்கு வெளியிடப்பட்டன.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago