Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 15 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்றுக்கொண்டிருந்த போது வழக்கில் சாட்சியமளித்துக்கொண்டிருந்த மாணவியின் தாயார் மற்றும் சகோதரர் ஆகிய இருவரம் மன்றில் மயங்கி விழுந்தனர்.
இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
இதன்போது, மாணவியின் தாயார் மன்றில் சாட்சியமளித்தார்;. அவர் சாட்;சியமளித்துக் கொண்டிருந்தபோது மன்றில் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மன்றிலுள்ள கதிரையில் அமரவைக்கப்பட்டார்.
தொடர்ந்து சகோதரன் சாட்சியமளிக்கையில் அவருடம் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
11 minute ago
46 minute ago
53 minute ago
58 minute ago
Kethis Tuesday, 16 June 2015 09:35 AM
Arabu naattu sattam srilankavil payanpaduththa venum.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
46 minute ago
53 minute ago
58 minute ago