Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 15 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற எல்லைக்குள் அமைந்துள்ள கோவில்களில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிடுதல் மற்றும் இசைக்கச்சேரிகளை நடத்துவதற்கு தடை விதித்து பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா, திங்கட்கிழமை (15) உத்தரவு பிறப்பித்தார்.
ஆலயங்கள், இசைக்கச்சேரி நடக்கும் போது ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் ஒலிக்க விடுவதால், க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் அதனை தடை செய்யுமாறு கோரி பொதுமக்கள், மாவட்ட நீதவானுக்கு பல தடவை கடிதம் எழுதியிருந்தனர்.
இதனைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், மாணவர்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு இந்தத் தடையுத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன், பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நெல்லியடி, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இதனை நடைமுறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் நீதவான் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
33 minute ago