Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 ஜூன் 15 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் பயங்கரவாதக் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், திங்கட்கிழமை (15) அனுமதியளித்தார்.
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மாணவியின் தாயார், சகோதரர், சட்டவைத்தியதிகாரி, புலனாய்வு அதிகாரி, ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் சாட்சியமளித்தனர்.
கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை பொலிஸார், மன்றில் இன்று சமர்ப்பித்தனர்.
அவற்றை இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், இந்தக் கொலை வழக்குடன் தொடர்புபட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளையும் சோதனை செய்வதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சாட்சியமளித்திருந்த மாணவியின் தாய் மற்றும் சகோதரர் மன்றிலேயே மயங்கி வீழ்ந்துவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி நீதவான் ஒத்திவைத்தார்.
7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago