2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வான் அமைத்துத் தருமாறு வலளாய் மீனவர்கள் கோரிக்கை

Menaka Mookandi   / 2015 ஜூன் 17 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வளலாய் பகுதியில் மீளக்குடியேறிய மீனவர்கள் தங்களின் கட்டுமரங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு வான் அமைத்துத் தருமாறு கோரியுள்ளனர்.

கடந்த 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு வலளாய் பகுதியில் மீளக்குடியேறிய மக்களின் பிரதான தொழிலான மீன்பிடித் தொழில் காணப்படுகின்றது.

இந்த மக்கள் கட்டுமரங்களில் சென்று மீன்பிடிகளை மேற்கொண்ட பின்னர் தங்கள் கட்டுமரங்களை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்த முடியவில்லையென தெரிவித்தனர்.

வான் அமைக்கப்படாமல் இருப்பதால் காற்று வீசும் காலங்களில் கட்டுமரம் சேதமடையும் அபாயம் இருப்பதால் வான் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

இந்தப் பகுதி மக்கள் தங்களிடம் உள்ள மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு கட்டுமரத்திலும், வீச்சு வலையிலும் தொழில் செய்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .