Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 18 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
போர்வடு தாங்கி மீண்டெழும் பாடசாலைக்கு தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் ஒரு மைல் கல், என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையின் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்புவிழா பாடசாலையின் அதிபர் மு.ரவீந்திரன் தலைமையில், புதன்கிழமை (17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த பாடசாலைக்கு இன்று இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஒரு வரப்பிரசாதம். போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பாடசாலையாக இது காணப்படுகின்றது. மிகவும் பிரமாண்டமாக இருந்த கட்டடத்தொகுதி இடிந்து சிதைந்து கிடந்ததை, கடந்த காலம் அறியும்.
அத்தகைய பின்னணியில் இருந்துதான் இந்த பாடசாலை எழுகின்றது. அதன் எழுச்சியில் இந்த தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு இந்த ஆய்வு கூடத்தை மாணவர்கள் இலட்சிய வெறியோடு பயன்படுத்த வேண்டும்.
விவேகானந்தர், அன்னை தெரேசா, அப்துல் கலாம் ஆகியோர் முடியும் என்ற இலட்சியத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டு வென்றார்கள். இன்று அவர்கள் உலகத்தால் மதிக்கப்படுகின்றார்கள். இன்று உலகின் உயர்ந்த பீடங்களில் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். உலகின் பாரிய மாற்றங்களில் தமிழர்களின் பங்கு இருக்கின்றது. வல்லரசு நாடுகளின் மூளைகளில் தமிழர்;களின் மூளையும் இருக்கின்றது. கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக இலட்சியத்தோடு பயன்படுத்த வேண்டும் என்றார்.
6 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago