2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற மேலுமொருவர் கைது

Gavitha   / 2015 ஜூன் 18 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்.கே.கே.எஸ் வீதி அரசடியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 7இல் கல்வி கற்கும் 6 மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று இரண்டாவது சந்தேக நபர் வியாழக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்;ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து, பாடசாலைக்கு வியாழக்கிழமை (18) சென்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மாணவர்களிடமிருந்து பாக்குகளை கைப்பற்றியுள்ளதுடன், மாணவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.

மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாக்கு விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மானிப்பாய் வீதி ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த இரண்டாவது சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .