Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய மாணவர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.
இக்கண்காட்சியில் ஆரம்ப மற்றும் இடைநிலை வகுப்புக்களுக்குரிய கற்றல் வளங்களாகப் பயன்படுத்தக்கூடிய இருநூறுக்கும் மேற்பட்ட உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கோப்பாய் மகா வித்தியாலய அதிபர் த.ஞானப்பிரகாசம், யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி ச.அமிர்தலிங்கம், கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ.கே.கணபதிப்பிள்ளை உள்ளிட்டோர் காட்சிக் கூடங்களைத் திறந்து வைத்தனர்.
முற்பகல் 11.30 மணியளவில் கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் காட்சிக் கூடங்களைப் பார்வையிட்டு ஆசிரிய பயிலுநர்களைப் பாராட்டினார்.
தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களான துரை. இளங்குமரன் கலாநிதி சி.பத்மராஜா, சி.குகன், பப்சி மரியதாசன் மற்றும் கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.கா.கணபதிப்பிள்ளை முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் நா.சுவாமிநாதன் ஆகியோர் காட்சிக்கூடங்களை மதிப்பீடு செய்தனர்.
சிறந்த உபகரணங்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. கண்காட்சியை தேசிய கல்வியியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரியர்கள் மற்றும் கோப்பாய் பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் பார்வையிட்டனர்.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago