Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 21 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எம்.றொசாந்த்
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் தெரவித்துள்ளனர்.
அனுராதபுர சிறைச்சாலைக்கு சனிக்கிழமை (20) காலை சென்ற பிரதி அமைச்சர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களது தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.
அதன் போது தாம் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சிலர் 20 வருடங்களுக்கு மேலாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலருக்கு இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் சாட்சியங்கள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் கைதிகள் பிரதி அமைச்சரிடம் முறையிட்டனர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவோம் என கூறினார்கள், ஆனால் இதுவரை அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவில்லை எனவும் தமது விடுதலையை துரிதப்படுத்துமாறும் அவர்கள் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
எமது விடுதலை தாமதப்படுத்தப்பட்டால், விடுதலையை துரிதப்படுத்தக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைவரது கவனத்துக்கு கொண்டு வருவதாக இதன்போது அமைச்சர் உறுதி மொழியளித்தார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago