Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 21 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எல்.லாபீர்
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கான யோகா பயிற்சி, யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு இன்று சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மேல்நாடுகளில் சிறப்பாக வியாபித்துள்ள யோகா, இலங்கையில் மிகவும் குறைவாகவே உள்ளது. யோகா பயிற்சி மூலம் சிறந்த ஆளுமையை ஏற்படுத்த முடியும். தூக்கமின்மை, பயம் மற்றும் மனை உளைச்சல் உள்ளிட்ட பலவற்றுக்கு யோகா சிறந்த நிவாரணியாகவுள்ளது. சிறு வயதிலிருந்து யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பாடசாலைகளில் யோகா பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago