Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 21 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக அச்சுவேலி வடக்கு மடத்தடி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது 14 வயது மகளை அயல்வீட்டுக்காரர் பாலியல் துஸ்பிரயோகம் செய்தர் என்ற பொய்யான வதந்தியை நம்பி யாருடைய முறைப்பாடும் இல்லாமல் பொலிஸார், மகளை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றமை மற்றும் நீதிமன்ற அனுமதியில்லாமல் சட்ட வைத்தியதிகாரியிடம் காண்பித்து மருத்துவ அறிக்கை பெற்றுள்ளார்.
இருந்தும், தனது மகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாகவில்லையெனவும் இந்த நடவடிக்கைகள் காரணமாக தனது மகள் விரக்தியடைந்து பாடசாலைக்குச் செல்வதற்கு மறுத்து வருவதாகவும் அந்தப் பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி முழுமையான பதிலை வழங்கவேண்டும் எனக்கோரி, குறித்த பெண் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் பொறுப்பதிகாரியிடம் விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணைக்குழுவால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago