2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீர் வடிகாலமைப்புச் சபையின் புதிய கட்டம் திறப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். சிவன் பண்ணைப் வீதியில் 282 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட யாழ். கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரண்டு கட்டடத் தொகுதிகள், இன்று திங்கட்கிழமை (22) நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமால் திறந்து வைக்கப்பட்டன.

யாழ். கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மேலதிக பொது முகாமையாளர் கட்டடம் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் யாழ்;ப்பாண பிராந்திய பொது முகாமையாளர் கட்டடம் ஆகியனவே திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் குழாய் பொருத்துநருக்கான உபகரணத் தொகுதிகளும் வழங்கப்பட்டன.

மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் பா.செந்தில்நந்தனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .