2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாடுகளை கடத்திய மூவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 22 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி பாரவூர்தியொன்றில் 5 மாடுகளைக் கொண்டுசென்ற மூன்று சந்தேகநபர்களை திங்கட்கிழமை (22) கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டிம்.ஷிந்தக என்.பண்டார தெரிவித்தார்.

கிளாலி பகுதியிலிருந்து சாவகச்சேரிக்கு மாடுகளைக் கொண்டு செல்லும் போது, பொலிஸார் பாரவூர்தியை மறித்துச் சோதனை செய்தனர். இதன்போது, சட்டவிரோதமாக மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டு பளை மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாரின் ரோந்து நடவடிக்கையை கண்காணித்து மாடு கடத்துவதற்கு உதவிய மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டார். மூவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .