2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் ஐவர் கைது

Princiya Dixci   / 2015 ஜூன் 22 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சிய ஒருவரைப் பிடிக்கச் சென்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் 5 சந்தேகநபர்களை இன்று திங்கட்கிழமை (22) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஷிந்தக என்.பண்டார தெரிவித்தார்.

மேற்படி பகுதியில் கசிப்பு காய்ச்சிய சந்தேகநபர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை (19) இரவு பொலிஸார் கைது செய்தனர். இதன்போது, ஒன்றுகூடிய சிலர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த இரண்டு பொலிஸார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை (20) சென்ற பொலிஸார், 12 பெண்கள் மற்றும் கசிப்பு காய்ச்சியவர் உட்பட 5 ஆண்களாக மொத்தம் 17 பேரைக் கைது செய்து, பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி, சந்தேகநபர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையிலேயே இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு குறித்த 5 சந்தேகநபர்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .