Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 22 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச விதவைப் பெண்கள் தினம், ஜூன் 23ஆம் திகதி உலகம் பூராவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகத் தென்னங்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கும் திட்டமொன்றை வடமாகாண சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் முன்னெடுத்துள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி, இன்று திங்கட்கிழமை (22) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது, வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார்.
தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட கலப்பு இனமான சீ.ஆர்.ஐ–60 என்ற தென்னை ரகமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு இவ்வாறு தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன. நெதர்லாந்து மனிதநேயச் செயற்பாடுகளுக்கான கூட்டுறவு அமைப்பின் நிதி உதவியுடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சிக்கனக்கடன் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் செ.இரகுநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.கணேசு, தென்னை அபிவிருத்திச் சபையின் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் ஆகியோரோடு சிக்கனக் கடன் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் மாவட்டத் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago