Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 23 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் பெரும்பாலான பாடசாலைகளில் குறிப்பாக கிராமங்களில் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் பற்றாக்குறை மிகமோசமாக நிலவி வருகிறது. இந்நிலைமையை வெளியில் கூற முடியாத அளவுக்கு அதிபர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
பூநகரி தெற்கு, ஜெயபுரம் பிரதேசத்தில் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ், 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
கிளிநொச்சியில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. வடமாகாணத்தில் மேலதிகமாக ஆசிரியர் வளத்தை வைத்துக்கொண்டு அதனை தேவையுள்ள, பற்றாக்குறையான பிரதேசங்களை நோக்கி நியாயமான வளப்பங்கீடு செய்ய முடியாத வினைத்திறனற்ற நிலையில் மாகாண கல்வி அமைச்சு காணப்படுகின்றது.
தங்களின் வினைத்திறனற்ற செயற்பாடுகளை மூடி மறைக்கவே பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட தேவைகள் மற்றும் பிரச்சினைகளை வெளியில் கூறக்கூடாது என்று அதிபர்களுக்கு நிர்ப்பந்தம் விதிக்கப்பட்டிருக்கின்றது. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இந்த செயற்பாடு அந்த மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் செய்யும் துரோகம் ஆகும்.
பாடசாலைகளுக்கு கட்டடம் உள்ளிட்ட பௌதீக வளங்கள் கொண்டு வரப்பட்டது. இருந்தும் மாணவர்களால் அதன் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ச்சியாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை இதற்கு காரணமாக அமைகின்றது. பாடசாலைகளின் அதிபர்கள் நெருக்கடி மிக்க நிலையில் தங்களது கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago