2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாடசாலை சமையல் பொருட்களை திருடிய நால்வர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 23 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் சமையல் அறையிலிருந்த சமையல் பொருட்களை ஞாயிற்றுக்கிழமை (21) இரவு திருடிய குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த 4 சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சமையல் அறையிலிருந்த 3 பெட்டி மீன்ரின், 2 கான் ஒயில் என்பன திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0

  • Jeya Thursday, 25 June 2015 11:13 AM

    Enna oru kevalam. jaffna engaa pokuthu. maanam pokuthu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .