2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொலிஸாருக்கு சாரயம் விற்றவர் கைது

Thipaan   / 2015 ஜூன் 24 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் பொலிஸாருக்கு சாரயம் விற்ற 64 வயதுடைய சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை (23) இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதிப்பத்திரமின்றி சாரயம் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிவில் உடையில் சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸாருக்கு, சந்தேகநபர் 180 மில்லிலீற்றர் சாரயத்தை 250 ரூபாய்க்கு வழங்கியுள்ளார்.

இதனையடுத்தே பொஸார், அவரை கைது செய்துள்ளனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .