2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தங்கத்தை கடலுக்குள் வீசியவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2015 ஜூன் 25 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் சென்ற 5 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், புதன்கிழமை (24) உத்தரவிட்டார்.

காங்கேசன்துறை கடற்பகுதியூடாக புதன்கிழமை (24) அதிகாலை தங்கம் கடத்த முற்பட்டவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட போது, அவர்கள் தங்கள் வசமிருந்த 5 கிலோகிராம் தங்கத்தை கடலுக்குள் வீசியுள்ளனர்.

கடத்திய 4 பேரையும் கைது செய்த கடற்படையினர், காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .