2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வலி. வடக்கு - கிழக்கில் மீளக்குடியேற 1,087 குடும்பங்கள் பதிவு

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்வதற்கு 1,087 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ். மாவட்;டச் செயலகம் தெரிவித்தது.  

வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்பட்ட இடங்களில் மீளக்குடியமர்வதற்கு 795 குடும்பங்களும், வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்வதற்கு 292 குடும்பங்களும் பதிவுகளை செய்துள்ளன.

பதிவுகளை மேற்கொண்டவர்களில் பலர் தற்காலிகமாகவேணும் அப்பகுதியில் குடியமராத நிலையுள்ளது. குடியமர்ந்தவர்களில் பலருக்கு தற்காலிக வீடுகள் (அரைநிரந்தர) யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றது.

மீளக்குடியமரும் ஏனையவர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைக்கவும் நிறுவனம் முன்வந்துள்ளது. தற்காலிக வீடு ஒன்று அமைப்பதற்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .