2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆடுகள் திருடியவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அல்லாரைப் பகுதியில் ஆடுகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கு தலா 7,000 ரூபாய் அபராதம் விதித்த சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், இருவருக்கும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாதகால சிறைத் தண்டனையும் விதித்து வியாழக்கிழமை (25) தீர்ப்பளித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி அல்லாரைப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆடுகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு  எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, தவணை முறையில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் வழக்குக்கான தீர்ப்பு இன்று நீதவானால் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .