2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கைகலப்பில் அறுவர் காயம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற கைகலப்பில் அறுவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் கீழ் 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். கொற்றாவத்தை சிவானந்தா என்ற பெயரில் இயங்கிய விளையாட்டுக்கழத்தை அல்வாய் மேற்கு சிவானந்தா விளையாட்டுக்கழகம் என சிலர் மாற்றினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிலர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த போது, அனைவரும் சமரசமாக சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் கீழ் விளையாடவேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பெயர் மாற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மற்றைய தரப்பினருக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை (25) கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .