Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 25 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
குப்பி விளக்கை மனைவி மீது எறிந்து அவர் உயிரிழக்க காரணமாக இருந்த காக்கைதீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை வியாழக்கிழமை (25) கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
காக்கைதீவைச் சேர்ந்த சிறிதரன் சாந்தினி (வயது 33) என்பவரே உயிரிழந்தார். சந்தேகநபர்கள் கடந்த 20ஆம் திகதி மனைவியுடன் சண்டையிட்டு மண்ணெண்ணெய்யுடன் கூடிய குப்பி விளக்கை மனைவி மீது எறிந்துள்ளார்.
எரிகாயங்களுக்குள்ளாகிய மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (24) உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கணவனைக் கைது செய்தனர்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளன என்றும் முதல் மனைவி தீயிட்டு தற்கொலை செய்த நிலையில், இவரை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இரண்டாவது தடவையாக திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.
சடலத்தின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago