Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 25 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 9 வயது சிறுமிக்கு 100 ரூபாயைக் கொடுத்து அவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற 65 வயதுடைய வயோதிபரை வெள்ளிக்கிழமை (26) அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குடிநீர் எடுப்பதாக அயல் வீட்டுக்குச் சென்று வருபவர். வழமைபோல் கடந்த 19ஆம் திகதி குடிநீர் எடுப்பதற்கு அயல் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு தனிமையில் இருந்த அயல் வீட்டு வயோதிபர் சிறுமிக்கு 100 ரூபாய் காசை வழங்கி துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். பெற்றோர் இது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முதியவரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago