2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மாணவர்கள் குழுவொன்று சுயேட்சையாக போட்டி

Princiya Dixci   / 2015 ஜூலை 13 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக மாணவர்களை உள்ளடக்கிய சுயேட்சைக் குழவொன்று யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது.

சுந்தரலிங்கம் சிவதர்ஷன், ஜெயரத்தினம் யதீசன், மங்களேஸ்வரன் கஜன், சுந்தரலிங்கம் சுதர்சன், இராசகுமார் கிரிஷாந், பந்துசேனா அருண்ராஜ், பரம்சோதிநாதர் பிரேந்திரா, சிவலிங்கம் லவகீசன், தங்கவேல் கிரிவேந்தன் மற்றும் யோன்பப்ரிஸ்ற் பிரதீப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த சுயேட்சைக்குழுவில் போட்டியிடும் 10 பேரும் 21 வயதிலிருந்து 30 வயது வரையில் இருப்பதுடன், அவர்களில் 7 பேர் மாணவர்களாகவும் 3 பேர் வியாபாரம் செய்பவர்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .