Menaka Mookandi / 2015 ஜூலை 20 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சிறைச்சாலைக்கும் மதுபானசாலைக்கும் செல்ல முற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி அலுவலகத்திற்கு அனுப்பியவர்கள் நாம் என வடமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவகலத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அங்கஜன், 'இந்த முறை நாடாளுமன்றத்துக்கு நாங்கள் போகின்றோம். எந்த கட்சி அரசுக்கு வந்தாலும் தேசிய அரசாங்கத்தில் நாங்கள் அமைச்சர்கள்' என்றார்.
'பல வருடங்களாக பலர் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் சாதித்தவை எனச் சொல்ல ஏதாவது உள்ளதா? நாங்கள் 4,500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம்.
இவற்றை நாம், எந்த அங்கிகாரமும் அதிகாரமும் இல்லாமல் தான் செய்தோம். எமக்கு அங்கிகாரம் இருந்திருந்தால், நாம் யாழ் குடாநாட்டையே முன்னேற்றி இருப்போம் என்ற நம்பிக்கை இருக்கின்றது' என்றும் அவர் கூறினார்.
'நாங்கள் தமிழ் தேசியத்துக்கோ உரிமைகளுக்கோ எதிரானவர்கள் அல்லர். அதே நேரம் எங்களது வாழ்வாதாரம், பொருளாதாரம் என்பன மேம்பட வேண்டும்.
எங்களுக்கு அரசியல் பின்னணி இல்லை. ஊழல் தெரியாது. கை சுத்தமானவர்கள். அப்படியான பொதுமகன் நாடாளுமன்றத்துக்கு சென்று மாற்றத்தை ஏற்படுத்துவதே உண்மையான மாற்றம்' என அங்கஜன் மேலும் கூறினார்.
49 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago