Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 20 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள், திங்கட்கிழமை (20) சுமார் மூன்று மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (17) முதல் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய பல்வேறு தரத்திலான சிற்றூழியர்கள் எந்த வகையான முன்னறிவிப்பும் இன்றி வேலையில் இருந்து நிறுத்தப்பட்டனர்.
அவர்கள் தமது வேலையை மீள வழங்கக்கோரி போராட்;டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அவ்வேலையை மீள வழங்க முடியாது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் நேற்று அறிவித்தார். இந்நிலையிலேயே, வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் 3 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
எனினும், இந்த பணிப் பகிஷ்கரிப்பினால் வைத்தியசாலை விடுதிகளில் உள்ள நோயாளர்கள் மற்றும் அவசர நோயாளர்கள் பாதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
தொடர்ந்து இந்த ஊழியர்களின் பணி வைத்தியசாலைக்கு அவசியமாக இருப்பதால், இவர்களின் நியமன விடயத்தில் உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிடின் வைத்தியசாலையின் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வைத்தியசாலைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
16 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
1 hours ago