Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 23 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகை என்பது மக்களின் நன்மை கருதி அல்ல. தனது குடும்பம் மற்றும் குடும்பத்தை சூழவுள்ள கும்பல்களின் இருப்புக்காகவே அவரின் மீள் வருகை அமைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸ்ஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷே மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார். அது அவர் தனது குடும்பத்தின் மீது இருக்கின்ற ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்கும் அதனை வேறு திசையை நோக்கி கொண்டு செல்வதற்குமாக இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்' என்றார்.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள அவரை சூழ்ந்துள்ள கும்பல் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து மீள்வதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றார். அடுத்ததாக அவர் குருநாகல் மாவட்டத்தில் ஏன் போட்டியிடுகின்றார் என்றால், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவரது குடும்பத்தை சார்ந்த நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகிய மூவர் போட்டியிடுகின்றார்கள்.
அந்த மூவருக்கும் விருப்பு வாக்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் வேறு யாருக்கும் விருப்புவாக்கு வழங்க முடியாது. இதன் காரணமாக தமது குடும்பத்தின் இருப்பு கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற சந்தேகத்திலேயோ, அல்லது குடும்பத்தில் இருப்பவர்கள் தோற்றுவிடுவார்களோ, என்ற சந்தேகத்திலேயே அவர் குருநாகல் நோக்கி நகர்ந்துள்ளார் என தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கியே தேர்தல் விஞ்ஞாபனம்
தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பான தீர்வு திட்டங்களை உள்ளடக்கியே மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய பிரச்சனையை தீர்ப்பதற்கு எங்களின் அணுகுமுறை என்ற தொனிப்பொருளில் கடந்த காலத்தில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் ஊடாக சில தீர்வு திட்டங்களை உருவாக்கியுள்ளோம் அதனை எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கி உள்ளோம்.
நாட்டில் இன்று மொழி ரீதியாக ஏற்பட்டுள்ள பிளவுகள் பாகுபாடுகளை நீக்குவதற்காக மொழி ரீதியாக சகலருக்கும் சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கியுள்ளோம்.
அதேவேளை, தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சனைகள், அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக, காணாமல் போனோரின் பிரச்சனைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
14 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
1 hours ago