2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

முதியவர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., கல்வியங்காடு கட்;டைப்பிராய் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்தவர் வெள்ளிக்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த அம்பாயிரம் வீரமுத்து (வயது 68) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.  
இவரது மகள் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் இவர் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
 
கடந்த சில நாட்களாக தந்தைக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்த போதும் தந்தை பதிலளிக்காமையால் சந்தேகம் கொண்ட மகள் உறவினர்களைக் கொண்டு வீட்டுக்குச் சென்று பார்வையிடக் கேட்டுள்ளார். உறவினர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வயோதிபர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதுடன், அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .