Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 25 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டி பகுதியில் பசுமாடுகளை மோதி விபத்தை ஏற்படுத்தி, அப் பசுமாடுகளின் உரிமையாளருக்கு வாழ்வாதார நட்டம் ஏற்படுத்திய பருத்தித்துறை போக்குவரத்து சாலையின் சாரதி, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கோண்டாவில் சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பஸ், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை கடந்த 15 பசுமாடுகளை மோதி தள்ளியது.
இதில் 5 மாடுகள் உயிரிழந்ததுடன், மூன்று மாடுகள் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸார், குறித்த பஸ் சாரதிக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வியாழக்கிழமை (23) வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேற்படி சாரதிக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சாலை அதிகாரிகளால் சாரதி பணியிலிருந்து வெள்ளிக்கிழமை (24) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சாலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
13 minute ago
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
1 hours ago