Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 27 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தமிழர் தியாகங்களை முதலீடாக வைத்து சுயநல அரசியல் செய்பவர்களை சமூகத்திலிருந்து ஓரங்கட்டுங்கள்' என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.
மானிப்பாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, '1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஆயுதப் போராட்டத்தை அரசியல் தேவைகளுக்காக சுயநலமாக்கியதன் விளைவாகத்தான் இன்று வரை தமிழ் மக்கள் எந்தவொரு உரிமைகளையும் தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள முடியாத இனமாக இலங்கையில் வாழவேண்டியுள்ளது' எனச் சுட்டிக்காட்டினார்.
'ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் மக்களை திட்டமிட்ட வகையில் விரோதிகளாக்கி தன்னினத்துக்குள்ளேயே அழிவுகளை ஏற்படுத்த காரணமானவர்களை இன்று வரை தமிழ் மக்கள் இனங்கண்டுகொள்ளாது தொடர்ந்தும் அத்தகையவர்களிடம் தமது அரசியல் பலத்தை கொடுத்து வருவதனாலும் தான் நாம் அழிவுகளிலிருந்து மீளமுடியாத இனமாக வாழ்கின்றோம்.
இந்த நிலைமைகளை மாற்றியமைத்து புதிய வாழ்வியல் பாதையை உருவாக்கி கொள்ள தமிழ் மக்களுக்கு சுயநலமற்ற ஒரு அரசியல் பலம் தான் தற்போது தேவையாக உள்ளது. 60 வருட தமிழ் மக்களது வரலாற்று தடங்களில் சுயநலத்தால் ஏமாற்றப்பட்டதும் மீளமுடியாத வடுக்களை சுமந்ததையும் தவிர வேறெந்த பதிவுகளும் பதியப்பட்டிருக்காது என்பதே உண்மை. இந்த நிலைக்கு யார் காரணம்? போராடியவர்களா? போராடும்படி சுயநலததுக்;காக தூண்டியவர்களா?' எனச் சாடினார்.
'தமிழ் மக்களது உரிமைக்காக போராடிய பலர் இன்று தனிமைப்படுத்தப்பட்டு ஒருவேளை உணவுக்கு கூட வசதியின்றி திரிகின்றனர். ஏன் இந்த நிலைமை இவர்களுக்கு வரவேண்டும்? போராட்டத்தை முதலீடாக வைத்து இன்றுவரை நாடாளுமன்றம் சென்று சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தினர் இந்த பொதுத்தேர்தலில் அவர்களுக்கு எதனை தெரிவிக்கவுள்ளனர்' எனக் கேள்வி எழுப்பினார்.
12 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
1 hours ago