2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்: மதனி

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கடந்தகால தேர்தல்களைவிட இம்முறைத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. போட்டியிடுகின்ற பெண்களை நாடாளுமன்றம் அனுப்பி பெண்களுக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி மதனி நெல்சன் தெரிவித்தார்.

நல்லூரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'பெண்களுடைய பிரச்சினையை நன்கு புரிந்தவள் என்ற வகையில் என்னை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும். நான் பெண்களுக்காக குரல் கொடுப்பேன்' என்றார்.  

'கடந்த காலத்தில் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் முழுமையான பாதிப்புக்களை மக்களுடன் இருந்து அனுபவித்தவர்களில் நானும் ஒருவர். யுத்தத்தால் விதவைகள் ஆக்கப்பட்ட, மற்றும் அங்கவீனமாக்கப்பட்ட பெண்களின் மனநிலைமையை நான் நன்கு புரிந்துகொண்டவள்.

பொதுமக்கள் ஒரு இடத்தில் கூட்டி அவர்கள் மீது கொத்துக் குண்டுகளை இராணுவத்தினர் வீசி அவர்களைக் கொண்டனர். மக்களின் அவலத்தை நேரில் பார்த்து அனுபவித்தேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .