2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'2020 ஆம் ஆண்டுக்குள் தீர்வு'

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் தீர்வை முன்வைக்கும் என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வடமாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடாசாலை நூலகங்கள் மற்றும் சமூக நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் இன்று (25) வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்,

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க அரசாங்கம் முயற்சிகளையும், ஆலோசனைகளையும் நடாத்தி வருகின்றது. எனவே, 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பார்கள் என எண்ணுகின்றேன்.

அத்துடன், தற்போது அரசாங்கத்தை கலைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து மடத்தனமானது.  அவ்வாறு கலைக்க முடியாது. அரசாங்கத்தை கலைக்காது எவ்வாறு பொதுத் தேர்தல் வைக்க முடியும். அது நடக்கின்ற விடயம் அல்ல. 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் நீடிக்கும் என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X