Suganthini Ratnam / 2011 மே 03 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மின்சார நிலைய வீதியிலுள்ள ஞானம்ஸ் ஹோட்டல் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இந்த ஹோட்டலை திறந்து வைத்துள்ளதாக பலாலி இராணுவ ஊடகப்பிரிவு இன்று செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக 1987ஆம் ஆண்டு முதல் ஞானம்ஸ் ஹோட்டலின் செயற்பாடுகள் தடைப்பட்டன. பின்னர் இலங்கை இராணுவத்தினரின் 512ஆவது படைப்பிரிவினர் இந்த ஹோட்டலை கையகப்படுத்தியதிலிருந்து அது பாதுகாப்பு வலயத்தில் முடங்கியிருந்தது.
நாட்டில் யுத்தம் ஓய்வடைந்து சுமுகமான நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஞானம்ஸ் ஹோட்டல் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் யாழ். பொலிஸ் நிலையத்தின் உதவி அத்தியட்சகர் அபய சில்வா, பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா, வவுனியா மாவட்ட உள்ளூக்ராட்சி உதவி ஆனையாளர் சி.அச்சுதன், யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் வங்கி முகாமையாளர்கள், வர்த்தகர்கள், மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ச.கைலாசபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago