2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

250 பேருக்கு சுயதொழில் உதவித்தொகை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 16 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வடமாகாணத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 250 பேருக்கு தலா 39 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகைகளை வழங்கவுள்ளதாக ஸோஆ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்நிறுவனத்தின் வடமாகாண திட்ட அலுவலர் ஏ.விக்டர் ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களைக் கொண்ட வறிய குடும்பங்களே இந்த சுயதொழில் உதவியை பெறவுள்ளனர். இதற்கான பயனாளிகளை, பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக சமூக சேவை அமைச்சின் அலுவலர்கள் தெரிவு செய்து தந்துள்ளனர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகம், மன்னார் மாவட்டத்தின் மடு, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலகங்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று, ஒட்டிசுட்டான் பிரதேச செயலகங்களிலிருந்தே பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐந்து பிரதேச செயலகங்களிலும் தலா 50 பயனாளிகளுக்கு இந்த உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .