2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

2.7 மில்லியன் செலவில் பனை அபிவிருத்தி சபைக் காரியாலயம்

Super User   / 2013 ஜூலை 02 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நெடுந்தீவு பிரதேசத்தில் பனைசார் தொழில் நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் பனை அபிவிருத்திச் சபையின் காரியாலயம் அமைப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2.7 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரசே செயலர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 100 மில்லியன் திட்டத்தில் இந்த அலுவலகமும் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் அங்குள்ள பனை சார் தொழில் நடவடிக்கையை மேம்படுத்துவற்கும் கைப்பணிப்பொருட்கள் உற்பத்தி செய்யக் கூடிய இடமாக அந்த அலுவலகம் செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X