2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘27 குழுமோதல்கள் இடம்​பெற்றுள்ளன’

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

 

யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக, யாழ்ப்பாணப் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில், இன்று (02) நடைபெற்றது.

இதன்போது, அண்மைக் காலங்களில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தனது ஆளுமைக்கு கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆவா குழுவைச் சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதென்றும்  அதில் 10 சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 சம்பவங்களும் இடம்பெற்றனவெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வெளிப் பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களுடன் சேர்த்து 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவெனத் தெரிவித்த அவர், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 38 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் ஆவா குழுவைச் சாராத குழு மோதல்களில் ஈடுபட்டவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .