2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

28 ஆயிரம் மெற்றிக்தொன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ. வித்தியா

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு 28 ஆயிரத்து 637 மெற்றிக் தொன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்திலுள்ள 21 ஆயிரத்து 268 மீனவர்களினாலேயே மேற்படி எடையுள்ள மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தின் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49 திட்டங்களின் கீழ் 407 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளன.

இதன்மூலம் மீனவர்களின் மீன்பிடித்தல் முறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்படும் மீன்கள், உள்ளூர் நுகர்வினைத் தவிர்ந்த ஏனையவை வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுபவற்றில் நண்டு, இறால், கணவாய் என்பன முக்கிய இடங்களை வகிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் 20 ஆயிரத்து 349 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 284 பேர் இருப்பதாக அந்த புள்ளிவிபரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .