2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

300 தாதியர்களுக்கு புற்றுநோய் பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்ட 306 பி-1 பிரிவினரின் ஏற்பாட்டில் வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 தாதியர்களுக்கு புற்றுநோய் தொடர்பில் தெளிவுபடுத்தும்; பயிற்சிப்பட்டறை வியாழக்கிழமை (23) யாழ்.தாதிய கல்லூரியில் ஆரம்பமானது.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சிப் பட்டறையில் ஒவ்வொரு நாளும் 60 தாதியர்கள் பங்குபற்றவுள்ள இப்பயிற்சிப் பட்டறைக்கு இத்தாலியிலிருந்து வருகை தந்த விசேட வைத்திய நிபுணர் கார்லோ பெஸ்கொலர் இந்தப் பயிற்சிப்பட்டறையின் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி பட்டறைக்கு சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிராந்திய ஆலோசகர் தியாகராஜா, சர்வதேச லயன்ஸ் கழக சுகாதார வைத்தியர் குணதாசன், மும்பையிலிருந்து வருகை தந்த சத்திரசிகிச்சை நிபுணர் புச், மற்றும் வெளிநாடு சென்று சத்திரசிகிச்சை தொடர்பில் பயின்ற முதல் தென்னிலங்கை தாதியர் கீதாங்கி ரட்ணாயக்க என பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .