2025 ஜூலை 09, புதன்கிழமை

4 ஆயிரம் ஜூஸ் பக்கெற்றுக்கள் அழிப்பு

Super User   / 2014 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-   எஸ்.அரசரட்ணம்

சண்டிலிப்பாய் பிரதேசத்துக்குட்பட்ட விளான்பகுதியிலுள்ள ஜூஸ் தொழிற்சாலையொன்றில் சுகாதாரத்துக்கு ஒவ்வாத வகையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் ஜூஸ் பக்கெற்றுக்களை வியாழக்கிழமை (13) கைப்பற்றியதாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி எஸ்.றஜீவ் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி ஜூஸ் உற்பத்தி நிறுவனத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளதாகவும், சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்றவிதத்தில் தொழிற்சாலையை மறுசீரமைத்த பின்னரே திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என வைத்தியதிகாரி தெரிவித்தார்.

சுகாதார வைத்தியதிகாரி, மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பி.சிவரூபன், கே.ஜெகானந்தன் ஆகியோர் இணைந்து, சண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு கீழுள்ள உணவு கையாளும் நிலையங்கள் கடந்த வியாழக்கிழமை (13) சோதனையிடப்பட்டன.

இதன்போதே மேற்படி, தொழிற்சாலை சோதனையிடப்பட்டதாக சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .