2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

407 ஹெக்டெயர் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் டாஸ் நிறுவனத்தினால் இதுவரை 407.51 ஹெக்டெயர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக டாஸ் (DASH) கண்ணிவெடி அகற்றும் பிரிவின் நடவடிக்கை மேலாளர் கெனி முமைதீன் புதன்கிழமை (12) தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெடிபொருள் அடையாளம் காணப்பட்ட இடங்களில்; டாஸ் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் கடந்த 2010 ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக இதுவரை, 26,995 தனிநபர் மிதிவெடிகளும், 17 கனரக வாகனங்களுக்கு வைக்கப்படும் மிதிவெடிகளும், 11404 வெடிக்காத nஷல்கள் மற்றும் ஆயுதங்களும், 59,257 சிறிய ரக வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

'கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தட்டுவன்கொட்டி, நஜிக்குட்டியாறு, உமையாள்புரம், பெரியகுளம் ஆகிய பகுதிகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி பிரதேசங்களிலிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றி மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வாழ்வாதாரப் பயிர்ச்;செய்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்றவகையில் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அரசும், 2012ஆம் ஆண்டு ஜப்;;;;பான் அரசும் 2013ஆம் ஆண்டு அமெரிக்க அரசும் நிதியுதவிகளைச் செய்தது.

எமது நிறுவனத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் 300 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுவதுடன், அவர்களில் விதவைகள் மற்றும் முன்னாள் போராளிகள் முன்னுரிமை அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .