2025 மே 17, சனிக்கிழமை

43 இடங்களைச் சுவீகரிக்க நடவடிக்கை

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் கடற்படை மற்றும் இராணுவத்தின் தேவைகளுக்காக மட்டும் தற்போது 43 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அக் காணிகளை அளவீடு செய்து சுவீகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் நேற்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாங்கம் காணிகளை அளவீடு செய்வதனை தாங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் காணிகளை அளவீடு செய்வதற்கான அனுமதிகளை ஒருங்கிணைப்புக்; குழு வழங்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் கணிகளை வழங்குவதில்லை எனவும் மேற்கூறிய 43 இடங்கள் தொடர்பில் பிரதேச செயலர்கள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (08) இடம்பெற்றது.

இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .