Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 13 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
ஆசிய பசிபிக் சிறுவர்கள் இணைப்புத் திட்டத்தின் கீழ் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கடந்தாண்டு அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் ஆறு பேர் ஜப்பான் நாட்டுக்கு தமது பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளார்கள்.
கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் ஜப்பான் மொழியை கொழும்பில் கற்றதுடன் ஜப்பான் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அந்த நாட்டின் பழக்க வழங்கங்களை அறியவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு இவர்கள் தமது பயணத்தை மேற்க்கொள்கின்றார்கள்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவியொருவர் உட்பட ஆறு பேர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர். இவர்களில் யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூயில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவரும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்பவருமான தாரணி இந்திரன், களுத்துறை முஸ்லிம் பெண்கள் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பசிதா பாறுக், கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த நவீன் ஆர்.பிறேமரத்தின, கொழும்பு ஆனந்தாக் கல்லூரியைச் சோந்த சானுயா எதிரிசிங்க, காலி மஹிந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த லகித் நவோதயா மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே.ஜீ.பி.களனிபயிசரா ஆகியோர் இந்த சுற்றுலாவில் இடம்பெற்றுள்ளார்கள்.
இவர்கள் சுமார் ஒரு மாதகாலம் ஜப்பானில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago