2025 மே 20, செவ்வாய்க்கிழமை

5 வருடங்களில் 437 பிரேரணைகள், 19 நியதிச் சட்டங்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிச் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணசபை தனது 5 வருட ஆட்சிக்காலத்தில் 133 அமர்வுகளை இதுவரை நடாத்தியுள்ளது. 134 ஆவது அமர்வு இறுதி அமர்வாகும். இதுவரை நடைபெற்ற 133 அமர்வுகளில் 437 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவற்றுள் தமிழர்கள் மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான 6 முக்கியமான பிரேரணைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மக்கள் நலன் சார்ந்த 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதேபோல் குறைநிரப்பு நியதிச்சட்டங்களும் உள்ளடங்கலாக இதுவரை 29 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X