2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

52 மீனவர்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 16 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

இந்திய கரையோர காவல்படையினரால் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்ட 52 மீனவர்ளும் தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் வைத்தே அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்னர்.

திருகோமலையைச்சேர்ந்த மீனவர்களுக்கு தலா 1250 ரூபாவும் ஏனைய இடங்களைச்சேர்ந்த மீனவர்களுக்கு 1000 ரூபாவும் வழங்கப்பட்டதாக கடற்படையினர் அறிவித்தனர்.

காங்கேசன்துறை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்ட மீனவர்களிடம் நீரியல்வள திணைக்களத்தின் அதிகாரிலும் யாழ்ப்பாணத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். (பட உதவி: இலங்கை கடற்படை)







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .